பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை தடுத்த மூட நம்பிக்கை??!!

கேரள மாநிலம் முக்கம் கிராமத்தில் ஒரு கூட்டுறவு மருத்துவ மனையில் அபு பக்கர் என்பவரின் மனைவிக்கு  ஒரு மகன் பிறந்திருக்கிறான்

மருத்துவர்கள் உடனே தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

அபு பக்கர் சித்திக் அதற்கு அனுமதி மறுத்தார்.   மதியம் இரண்டு மணிக்கு பிறந்த குழந்தைக்கு அது பிறந்த பின் அன்றைய ஐந்து பிரார்த்தனை அழைப்புகளும் முடியும் வரை குழந்தைக்கு பால் கொடுக்க கூடாது என்று பிடிவாதம் பிடித்தார்.

அதனால் குழந்தைக்கு அடுத்த நாள் மதியம்தான் தாய்ப் பால்  கொடுக்க முடிந்தது.

மருத்துவர் ஆலோசனைகளை நிராகரித்த அபு பக்கரின் மீது காவல் துறை புகார் கொடுக்கப் பட்டு அவர் கைது செய்ய பட்டு விசாரணை  நடந்து வருகிறது.

இஸ்லாம் அப்படி சொல்கிறதா?

இல்லையென்றால் மூட நம்பிக்கை வைத்திருக்க மதம் ஒரு சாக்குதான்.

மத நம்பிக்கை அறிவை அடக்கி வைக்கலாமா ??!!

LEAVE A REPLY