சபரிமலை; உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக கலவரத்தை தூண்டுகிறதா பா ஜ க ?!

அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் அய்யபனை தரிசன செய்யலாம் என்ற உச்ச நீதி  மன்ற தீர்ப்புக்கு எதிராக மக்களை தூண்டி விட்டு தீர்ப்பு அமுல்படுத்த விடாமல் செய்ய அத்தனை சதிகளையும் அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறது பா ஜ க வும் சங்க பரிவார அமைப்புகளும்.

மத வெறியை தூண்டி மட்டுமே கட்சியை வளர்க்க முடியும் என்ற நிலைப்பாட்டில் பா ஜ க மாறவில்லை.

தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு போட இடது சாரி அரசு கட்டாயப் படுத்தப் படுகிறது.    மண்டியிடப் போகிறதா அல்லது சட்டத்தை அமுல்படுத்தப் போகிறதா இடது சாரி அரசு என்பதை நாடு எதிர்ப்பார்த்து இருக்கிறது.

இதற்கிடையில் மலையாள நடிகர் கொல்லம் துளசி  பேசிய பேச்சு அநா ரிகத்தின் உச்சம்.

உச்சநீதி மன்ற தீர்ப்பை நம்பி யாராவது பத்து வயதுக்கு மேல் ஐம்பது வயதுக்குள் உள்ள பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு வருகை  தந்தால் அவர்களை இரு கூறாக வெட்டி  எறிவோம் என்று பேசியிருக்கிறார் .

பின்னர்  அரைகுறையாக உணர்ச்சி வசப் பட்டு பேசியதாக விளக்கம் கொடுத்தார்.

ஒரு பக்கம் முஸ்லிம் பெண்களின் உரிமை பாதுகாப்புக்காக முத்தலாக் சட்டம்.   மறுபுறம் பெண்கள் ஆலய நுழைவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை தூண்டுவது.

பா ஜ க வின் இந்த இரட்டை வேடம் எடுபடாது.

இதற்கிடையில் திருப்தி தேசாய் போன்ற பெண் உரிமை ஆர்வலர்கள் உச்ச நீதி மன்ற தீர்ப்பை அமுல்படுத்தும் விதமாக விரதம் இருந்து சபரிமலை கோவிலுக்கு வரப் போவதாக அறிவித்திருக்கிறார்.

கொல்லம் தேசாய் போன்ற வெறியர்களால் ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கும் இருக்கும். சட்ட ஒழுங்கு பிரச்னை எழும்.

மறு  ஆய்வு செய்ய போவதாக பந்தளம் அரச குடும்பமும்  அறிவித்திருக்கிறது .  ஏன் நீதி மன்ற தீர்ப்புக்கு காத்திருக்காமல் போராட வேண்டும்.?

நாளையே தீர்ப்பு உறுதி படுத்தப் படுமானால் அப்போது என்ன செய்வார்கள்?

அதையும் எதிர்த்து போராடுவார்களா?    ஏற்க மாட்டோம் என்பார்களா?

விபரீதமான போராட்டம் வெற்றியை தராது!!!

LEAVE A REPLY