ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் இயற்ற ஆர் எஸ் எஸ் ஆதரவு??!!

அயோத்தி ராமர் கோயில் -பாபர் மசூதி வழக்கு உச்சநீதி மன்றத்தில் மேன்முறைஈட்டில் உள்ளது.

அலஹாபாத் உயர் நீதி மன்றம் தாவா இடமான ஏக்கர் 2.77 இடத்தை மூன்று பங்காக பிரித்து ஒரு பங்கை நிர்மொஹி அஹாரா என்ற இந்து அமைப்பிற்கும் இரண்டாவது பங்கை ராம் லல்லா விராஜ்மன் என்ற ராமர் விக்ரஹத்துக்கும் மூன்றாவது பங்கை சன்னி வக்பு போர்டுக்கும் தந்து தீர்ப்பளித்தது .

இந்த தீர்ப்பை எதிர்த்துதான் இப்போது உச்சநீதி மன்றத்தில் மேன்முறையீடு.      சாதாரண சிவில் வழக்கு அல்ல இது.   ஆனால் உச்சநீதிமன்றம் இதை சாதாரண சிவில் வழக்காக பாவித்து மூன்று நபர் அமர்வு விசாரித்தால் போதும் என்று நினைகிறது .

ஆனால் இந்து அமைப்புகள் குறைந்தது ஏழு அல்லது ஒன்பது நபர் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கோருகின்றன.

தீர்ப்பு எப்படி வரும் என்பதில் குழப்பம் இருப்பதால் இந்து அமைப்புகள் பொறுமை இழந்து  வருகின்றன.

ஏதாவது ஒரு அவசர சட்டம் இயற்றி அதன் மூலம் ராமர் கோவில் காட்ட ஆர் எஸ் எஸ் ஆதாரவளிக்கிறது..     சமீபத்தில்   அதன் தலைவர்  மோகன் பகவத் கோவில் கட்ட சட்டம் இயற்றுவதை ஆதரித்து பேசியிருப்பது சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

ஆர் எஸ் எஸ் செய்தி தொடர்பாளர் அருண் குமார் நீதிமன்றம் விரைந்து தீர்ப்பு தர வேண்டும் அரசு கோவில் கட்ட ஏதேனும் தடைகள் இருந்தால் அவற்றை நீக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஆர் எஸ் எஸ் சொல்லி  விட்டால் அதன் அத்தனை  துணை அமைப்புகளும் சேர்ந்து குரல் கொடுப்பார்கள்.

முஸ்லிம் தரப்பு சட்டம் இயற்ற படுவதை விரும்பவில்லை.   கொண்டு வந்தாலும் அதுவும் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டே தீர  வேண்டும்.

இதற்கிடையில் விஸ்வ இந்து பரிஷத்தின்  தலைவர் சாத்வி ப்ராச்சி என்பவர் உச்சநீதிமன்றம் எந்த வகையில் தீர்ப்பளித்தாலும் கோவில் கட்டியே தீருவோம் என்கிறார்.  இவர்தான் இஸ்லாம் ஒரு ஆபத்தான மதம் என்றும் முஸ்லிம் பெண்கள் மதம் மாறி இந்து இளைஞர்களை மணந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியவர்.

நரேந்திர மோடியின் ஆட்சிக்  காலத்தில் ராமர் கோவில் கட்ட முடிய வில்லை என்றால் இனி யார் காலத்தில் இது முடியும் என்பது சங்கத்தின் கவலை.

எப்படியானாலும் வரப்போகும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ராமர் கோவில் பிரச்னையை ஆதாயம் அடையும் பா ஜ க வின் திட்டம் நிறைவேறாது என்றே தெரிகிறது.

ஏனென்றால் ஜனவரி  2019 ல் உச்சநீதி மன்றத்தில் விசாரணை தொடங்கினாலும் தேர்தல் நடைபெற வாய்ப்பிருக்கும் ஏப்ரல் மாதத்திற்குள் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வாய்ப்பு குறைவு.

உயர் நீதி மன்றத்தில் 90 நாட்கள் நடந்த வழக்கறிஞர் களின் வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் அதற்கும் குறையாமல்  நடக்கலாம் அல்லவா?

ஆக தேர்தலுக்கு பிறகுதான் தீர்ப்பு.

LEAVE A REPLY