குழந்தையை பலி வாங்கிய ஜைன மத உண்ணாவிரத சடங்கு !??

jainism-aradhana

ஆராதனா என்ற ஜைன மதத்தை சேர்ந்த 13  வயது பெண் குழந்தை   தபஸ்யா  என்ற 68 நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.   எட்டாம் வகுப்பு படிக்கும் அவர் சென்ற ஆண்டு 34 நாட்கள்  இதே விரதத்தை மேற்கொண்டிருந்தாராம் .

நகை வியாபாரியான இவரது தந்தை தொழில் விருத்திக்காக இவரை வற்புறுத்தினாரா என்பது விசாரிக்கப் பட்டு வருகிறது.

மதம் மக்களை வாழ வைக்கத்தான்.   மாய்க்க அல்ல. உயரிய பல நோக்கங்களுடன் துவங்கப் பட்ட ஜைன மதம் இன்று பல சடங்கு களில் தன்னை மூழ்கடித்துக் கொண்டு விட்டது.

உண்ணாவிரதத்தை முடித்தவுடன் மேலும் இரண்டு நாள் திரவ  உணவு மட்டுமே உட்கொண்டது இரத்த அழுத்தம் குறைந்து மருத்துவ மனையில் அனுமதித்தும் பயனில்லாமல் இறந்து போனாள்.

செகந்தராபாத் போலிஸ் விசாரித்து கட்டாயப் படுத்தப் பட்டிருந்தால் நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தது.

வயதானவர்கள் சந்த்தாரா என்னும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வாழ்க்கையை முடித்துக் கொள்வதுண்டு .     அதுவே தற்கொலை முயற்சி என்பதால் தடுக்கப்  பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஜைனம் மரணத்தை ஊக்குவிக்க வில்லை.   ஜைன சம்பிரதாயங்கள் மனித உரிமைகளை காக்கின்றனவா??!!

LEAVE A REPLY