தலாக் சொல்லி விவாகரத்து செய்வது சரியா?? உச்சநீதிமன்றம் விசாரணை??!!

thalak-divorce

இஸ்லாத்தில் பலதார மணமுறையும் தலாக் சொல்லி விவாகரத்து செய்வதும் அனுமதிக்கப் பட்டவை.

பெண்கள் உரிமைக்குப் பாடுபடும் அமைப்புகள் இஸ்லாமிய சட்டங்களில் மாறுதல்கள் கோரி வருகின்றனர்.

மத்திய அரசு தனது வாக்குரையில் பாலின சமத்துவமும் பெண்களின் கௌரவமும் சமரசப்படுத்த முடியாத அரசின் நிலைபாடுகள் என்றது.

அதாவது பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் , மொராக்கோ துனிசியா, துருக்கி, இந்தோனேசியா, எகிப்து ,ஈரான் போன்ற இஸ்லாமிய நாடுகளே தங்கள் சட்டங்களில் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் விதத்தில் மாறுதல்களை செய்து கொண்டு விட்டதை சுட்டிகாட்டி மத சார்பற்ற நாடான் இந்தியா ஏன் அந்த மாறுதல்களை மேற்கொள்ளக் கூடாது என்ற கேள்வியை எழுப்பி இருந்தது.

பா ஜ க வின் கொள்கைகளில் ஒன்றான பொது சிவில் சட்டத்துக்கும் இந்த நிலைபாடுக்கும் சம்பந்தம்  இல்லை என்று அரசு வாதிட்டாலும் யாரும் நம்பத் தயாரில்லை.

நேராக சொன்னால் எதிர்ப்பு வலுக்கும் என்பதால் மறைமுகமாக இஸ்லாமிய சட்டங்களை ஒழிக்க பா ஜ க சதி செய்கிறது என்றே இஸ்லாமிய அமைப்புகள் கருத்து வெளியிட்டன .

மூன்று முறை தலாக் சொல்லிவிட்டால் மணமுறிவு இறுதி.   பின்பு மீண்டும் திருமணம் செய்யவே முடியாது.  அப்படி செய்ய வேண்டும் என்றால் மறுமணம் ஒன்றைச் செய்துவிட்டு  அதையும் ரத்து செய்து விட்டுத்தான் இவர்கள் மீண்டும் மணக்க முடியும்.

இதை ஒழிக்க வேண்டும் என்ற குரல் அவ்வப்போது முற்போக்கு சிந்தனை யாளர்கள் மத்தியில் எழுவதுண்டு.

கோரிக்கை நியாயம்  என்பதில் சந்தேகம் இல்லை.

இஸ்லாமிய நாடுகளே கைவிட்ட ரத்து முறையை நாம் மட்டும் விடக் கூடாது என்பது நியாயமான வாதமில்லை.

பா ஜ க  அரசு சொல்லுகிறதே என்பதை மட்டும்  பார்க்காமல் நியாயத்தை யும் சமுதாய பெண்களின் நன்மையையும் மட்டும் கருத்தில் கொண்டு இஸ்லாமிய சமுதாயம் தீர்மானிக்க வேண்டிய பிரச்னை இது.

LEAVE A REPLY