3.70 கோடியில் தங்க கவசம் பத்ரகாளிக்கு அளித்த தெலுங்கானா முதல்வர்??!!

தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் தன் விருப்பம் நிறைவேறியதை அடுத்து முதல்வர் கே. சந்திரசேகர ராவ் வாரங்கல் நகரில் உள்ள அருள்மிகு பத்ரகாளி அம்மனுக்கு மூன்றே முக்கால் கோடி செலவில் தங்க கவசம் அணிவித்தார் .

அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வருகை தந்திருந்தனர்.

கோவில் அதிகாரிகள் நகையை பரிசோதித்து வாங்கிக் கொண்டனர்.

இது அவர் தான் சொந்த செலவில் செய்ததுதான் என தெரிகிறது.    கட்சிக்கு இதில் சம்பந்தம் உண்டா என்பது பற்றி செய்தி ஏதும் இல்லை.

ஒரு மாநில அமைய இறையருள் வேண்டும் என்ற நம்பிக்கை கே சி ஆருக்கு இருப்பது நல்லதுதான்.   அதே நம்பிக்கை இயற்கை கொடுமைகளில் இருந்தும் காக்க  இருப்பது நல்லது.

முன்பே யாகம் போன்ற பல்வேறு பிரார்த்தனைகளை பல கோடி செலவில் செய்தவர்தான் இந்த முதல்வர் என்பது சிறப்பு செய்தி.

இறை நம்பிக்கை ஆட்சியாளர்களால் எப்படியெல்லாம் கையாளப் படுகிறது என்பதற்கு இது ஒரு சாட்சி.

தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியின் போராட்டத்தால் தான் தெலுங்கானா கிடைத்தது என்று  எல்லாரும் நம்பிக் கொண்டிருக்கையில் பத்ரகாளி அம்மனின் அருளால்தான் கிடைத்து  என்று அதன் தலைவர் நம்புகிறார் என்பது இதன் பொருள் அல்ல.

அம்மனின் பக்தர்களை தன் வசம ஈர்க்க முதல்வர் இப்படி தளம் அமைக்கிறார் என்பதுதான் உண்மை.

LEAVE A REPLY