தரிசனம் செய்து வரலாறு படைத்த பிந்து , கனகதுர்கா; எப்ப என்ன செய்வீங்க?

ஐயப்பன் கோவிலில் பத்து முதல் ஐம்பது வரையிலான பெண்கள் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும் சங்கப் பரிவாரங்கள் செய்து வந்த                      அடாவடித்தனத்தினால் தரிசனம் செய்ய முடியாமல் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பெண்கள் தரிசனம் செய்ய சென்றும் செய்ய  முடியாமல் திருப்பி அனுப்பப் பட்டு வந்தனர்.

இன்னிலையில் நேற்று பிந்து , கனகதுர்கா என்ற இரண்டு  பெண்கள் அய்யப்ப கோவிலில் இரவு நேரத்தில் பதினெட்டாம் படி ஏறுவதை தவிர்த்து வேறு  வழியில்  சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து விட்டார்கள்.   அவர்கள் இருவரும் நாற்பது வயது உடையவர்கள்.  இனி சங்க பரிவாரங்கள் என்ன செய்வார்கள் ?

தீட்டுக் கழிப்பார்களா ?    இனி அடுத்தடுத்து பெண்கள் தரிசனம் செய்தால் எத்தனை முறை தீட்டுக் கழிப்பார்கள்?    அது சாத்தியம் தானா?

உச்ச நீதி மன்றம் தீர்ப்பு  அளித்தாலும் ஏற்க மாட்டோம் என்பது நல்ல செய்தி அல்ல.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வுக்கு  மனுவும் செய்து விட்டு தரிசனம் செய்ய விடவும் மாட்டோம் என்று போராட்டம் நடத்தும் சங்க பரிவாரங்கள் எப்படியாவது இதை அரசியல் ஆக்கி லாபம் அடைய திட்டம் போடுவது கேரளத்தில் எடுபடாது.

ஏனென்றால் பெண்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க  620   கி மீ நீளத்துக்கு  பெண்கள் கலந்து கொண்ட    35  லட்சம் பேரை கொண்ட மகளிர் சுவர் போராட்டம் கேரளாவில் பெரு வெற்றி பெற்றிருக்கிறது.

தரிசனம் செய்த பெண்களின் வீடுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு  போடப்பட்டிருக்கிறது.   இது சங்க பரிவாரங்கள் அவர்களை மிரட்டவும் இனி வரும் எண்ணங்களோடு இருப்பவர்களை அச்சுறுத்தவும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற ஊகத்தின் அடிப்படையில் போடப்பட்டிருக்கிறது.

எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும்  உச்ச நீதி மன்ற தீர்ப்பை  நிறைவேற்றும் வகையில் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து பிந்து, கனகதுர்கா இருவரும் வரலாறு படைத்திருக்கிறார்கள் .   பாராட்டுவோம்.

LEAVE A REPLY